உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி....

போக்குவரத்து நெரிசல்காட்டுமன்னார்கோவில் நகரில் பஸ் நிலையம் ரோடு, செட்டித் தெரு, பெரிய குளம் வளைவு போன்ற பகுதிகளில் போக்குவரத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜசேகர், காட்டுமன்னார்கோவில்.கொசு தொல்லை அதிகரிப்புகாட்டுமன்னார்கோவிலில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணேசன், லால்பேட்டை.பஸ் நிறுத்தப்படுமாவிருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததில் டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலு, சித்தேரிக்குப்பம்.தடுப்பணை சீரமைக்கப்படுமாசிறுபாக்கம் அடுத்த மா.குடிகாடு கிராமத்தில் வனத்துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி கரைகள், மதகுகள் சேதமடைந்துள்ளது.காளிதாஸ், மா.குடிகாடு.பயணிகள் கடும் அவதிவிருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், திறந்த வெளியில் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.பாஸ்கர், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை