உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி;

செயல்படாத சிக்னல்விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் சிக்னல் செயல்படாததால் குழப்பம் ஏற்படுகிறது.- குமார், பெரியார் நகர்.சுகாதார சீர்கேடு விருத்தாசலம் மேட்டுக்காலனியில் சுகாதார வளாகம் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- தாமு, மேட்டுக்காலனி.போக்குவரத்து பாதிப்பு பு.முட்லுாரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலை அகரம் பகுதியில் சாலையோரம் மணல், ஜல்லி கொட்டுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. -நளமகராஜன், பரங்கிப்பேட்டை.மாணவர்கள் அவதிசேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திலிருந்து செல்லும் மேல்நிலைப் பள்ளி சாலையை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-அஜய்வருண் பிரகாஷ், சேத்தியாத்தோப்பு .ஆபத்தான மின் கம்பம்புவனகிரி வள்ளலார் கோவில் அருகில் குடியிருப்பு மற்றும் கடைவீதிகள் உள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மின்துறையினர் நேரில் ஆய்வு செய்து மாற்றி அமைக்க வேண்டும். -வர்த்தகர்கள், புவனகிரி.பலியாகும் குரங்குகள்விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் சாலையோரம் வீசும் உணவுகளை சாப்பிட வரும் குரங்குகளில் வாகனங்களில் சிக்கி பலியாவதை தடுக்க வேண்டும்.- பிரபாகரன், பெண்ணாடம்.கழிவுநீரால் சுகாதார சீர்கேடுமங்கலம்பேட்டை பேரூராட்சியில் விருத்தாசலம் சாலையோரம் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- அன்பு, மங்கலம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை