மேலும் செய்திகள்
புகார் பெட்டி
14-Nov-2025
போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. -கண்ணன், கடலுார். ------வாகன ஓட்டிகள் அவதி கடலுார் லாரன்ஸ்ரோட்டில் பூ மார்க்கெட் செல்லும் வளைவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. -கோபால், கடலுார். ----நோயாளிகள் அவதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் முகப்பில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள் சிரமமடைகின்றனர். -முத்துக்குமரன், விருத்தாசலம். சுகாதார சீர்கேடு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனத்தில் கட்டண கழிவறை கட்டியும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. -கணேஷ்குமார், விருத்தாசலம்.
14-Nov-2025