ஹைமாஸ் விளக்கு தேவை
ஹைமாஸ் விளக்கு தேவை: பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்த சென்டர் மீடியனில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - தனசேகரன், பெ.பொன்னேரி. குடிநீர் வசதி தேவை: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜா, முருகன்குடி. ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?: திட்டக்குடி - பெருமுளை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரவி, குடிக்காடு. சாலை ஆக்கிரமிப்பு: விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. - கார்த்திகேயன், விருத்தாசலம்.