புறநகர் பஸ் நிற்க நடவடிக்கை தேவை?
பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி, கடலுார், சென்னை செல்லும் புறநகர் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அசோக், பெண்ணாடம்.பூங்கா பணி விரைந்து முடிக்கப்படுமா? பெண்ணாடம் பேரூராட்சி, முக்குளம் பூங்கா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வக்குமார், பெண்ணாடம்.பயணிகள் நிழற்குடை தேவை சிறுபாக்கம் அடுத்த அடரி கிராம மக்களின் வசதிக்காக விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். முத்துசாமி, அடரி.