புகார் செய்தி//
பாலத்தில் சாலை சேதம்
விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றுப்பாலத்தில் மேல் உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.அசோகன், விருத்தாசலம் மது பிரியர்கள் அட்டகாசம்
ராமநத்தம் - தொழுதுார் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு வரும் நபர்கள், சாலையின் ஓரத்திலேயே அமர்ந்து மது குடிப்பதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.குமார், தொழுதுார் சாலையில் கும்மிருட்டு
ஆ.பாளையத்திலிருந்து கொரக்கை கிராமத்திற்கு செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியே செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.சதீஷ், கொரக்கை பக்தர்கள் அவதி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.பத்மராஜன், விருத்தாசலம். கழிவுநீர் தேங்குவதால் சீர்கேடு
மங்கலம்பேட்டையில் கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம் இல்லாமல் திறந்தவெளியில் விருத்தாசலம் சாலையோரம் தேங்கி, மினி கூவம்போல காட்சியளிக்கிறது.பிரபு, மங்கலம்பேட்டை.