உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

பரங்கிப்பேட்டை: அகில இந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கடலுார் மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரியில் நடந்த அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சண்டை பிரிவில் கடலுார் மாவட்ட பெறாக் ஒக்கினவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் அகிலேஷ், முகேஷ், லித்திக், கவுதம் ராஜ், நிறைமதியன், கிரீத்தீஷ் ஆகியோர் முதலிடம், பவித்ரன், ஆதித்யா, புவனேஸ்வரன் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். கட்டா பிரிவில், இனியா, திவ்யபாரதி, அகிலேஷ் ஆகியோர் முதலிடம், கவுதம் ராஜ், முகேஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குறிஞ்சிப்பாடியில் நடந்த பாராட்டு விழாவில் ஒக்கினவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் ரெங்கநாதன் பரிசு வழங்கினார். விழாவில், கராத்தே பயிற்சியாளர்கள் ராமலிங்கம், அன்பு ராணி, சிலம்ப பயிற்சியாளர் சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ