உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தேசிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

 தேசிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சுப்பம்மாள் சத்திரத்தில், சிலம்பம் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற, வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. யூத் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், கடந்த அக்டோபரில் கோவாவிலும், இம்மாத துவக்கத்தில், பெங்களூரிலும் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கடலுார் தி கிங்ஸ் ஆப் சிலம்பம் அணியினர் தங்கப்பதக்கம் வென்று, கோப்பையை கைப்பற்றினர். சிறப்பு விருந்தினராக புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் சிலம்பம் ஆசிரியர் ராஜிக்கு நினைவு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் திருநாவுக்கரசு, பூங்குன்றன், பாலு, பிரகாஷ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை