உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

கடலுார்: கடலுாரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வென்ற கடலுார் செஸ் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.கடலுார் சி.கே.,கல்லுாரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்திலுள்ள 18 மாவட்டங்களைச் சேர்ந்த 640 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். கடலுார் செஸ் அகாடமியைச் சேர்ந்த 88 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டுவிழா நடந்தது. பயிற்சியிளார்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், ருத்ரகணேஷ், புவனா ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகாடமியின் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை