மேலும் செய்திகள்
எஸ்.டி., சீயோன் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
20-Sep-2025
பரங்கிப்பேட்டை : கராத்தே போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளியில், பாராட்டு விழா நடந்தது. மாவட்ட அளவிலான கராத்தே போட்டி வடலுாரில் நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஸ்ரீ கார்த்திக், பவிஷ், ஜீவிதன், கவியரசன், நிஷோக், யஸ்வந்த், முகமது ஜமீல் ஆகியோர் சண்டை பிரிவில் முதலிடமும், பவிஷ், ஸ்ரீ கார்த்திக், முகமது அகில், கட்டா பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர். கலர் பெல்ட் பிரிவில் சாய் சஸ்வின், மஞ்சள் பெல்ட் பெற்றார். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் வைரமணி சண்முகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ரேவதி, பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை கோமதி முன்னிலை வகித்தனர். வெற்றிப்பெற்ற மாணவர்களை, பள்ளி நிறுவனர் சண்முகம் பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் ரங்கநாதன், கராத்தே ஆசிரியை அலமேலு மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
20-Sep-2025