உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., அழகிரி பிறந்தநாள் விழா

காங்., அழகிரி பிறந்தநாள் விழா

சிதம்பரம் : சிதம்பரம் நகர காங்., சார்பில் முன்னாள் மாநில தலைவர் அழகிரி பிறந்தநாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவிற்கு நகர தலைவர் தில்லை மக்கின் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத்குமார், பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டசெயலாளர் சின்ராஜ், குமார், ஐ.என்.டி.யூ.சி., ஸ்டீபன் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர்கள் தில்லை செல்வி, அஞ்சம்மாள், இந்திரா முன்னிலை வகித்தனர்.தெற்கு மாவட்ட காங்., தலைவர் செந்தில்நாதன், 300பேருக்கு வேட்டி, சேலை வழங்கினார். காமராஜர் கலைக்கல்லுாரி நிர்வாக இயக்குனர் தமிழரசு சம்பந்தம் 500பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். விவசாய அணித் தலைவர் இளங்கீரன், மாவட்ட துணைத்தலைவர் லால்பேட்டை நசீர்அகமது இனிப்பு வழங்கினர்.மாநில பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன், குமராட்சி வட்டார தலைவர் பகவத்சிங், மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடேசன், சண்முகசுந்தரம், செயலாளர்கள் இளங்கோவன், குமார், நடராஜன், மாவட்டசெயலாளர் சசிகுமார், மிஸ்கின், ராஜவேலு, அண்ணாமலை நகர தலைவர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் அபுசையத், கலைப்பிரிவு தலைவர் பொன் மாதவஷர்மா, மகளிரணி நிர்வாகிகள் ஜனகம், நந்தினி, ராதா விஜயகுமார், அழகர் மாலா, ருக்குமணி, அபி உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயல் தலைவர் தில்லை குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !