உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில், கவர்னர் ரவியை கண்டித்து, காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜிகாந்தி முன்னிலை வகித்தனர்.எஸ்.சி., - எஸ்.டி., மாவட்ட தலைவர் ராமலிங்கம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுரு, மகளிரணி லாவண்யா, ஜூலி, சகாயமேரி, மலர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைபடுத்தும் விதமாக பேசிய கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை