இணைப்பு
அதே போல் விருத்தாசலத்தில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கு, கோட்டேரி, முதனை வழியாக புதிய வழி தடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்நிலையில், துவக்கி வைப்பட்ட அன்று மட்டும் முதனை கிராமத்திற்கு பஸ் சென்றுள்ளது. அதன்பின், அந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்படவில்லை.இதில், ஆத்திரமடைந்த முதனை கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 12:00 மணியளவில் போக்குவரத்து பணிமனை 2 ஐ முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த போக்குவரத்து அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கனைவரும் கலைந்து சென்றனர்.