மேலும் செய்திகள்
அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா
18-Oct-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கடலூர் தெற்கு மாவட்டம்,கடலுார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வர்த்தக அணி மா வட்ட செயலாளர் ராமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி குருநாதன்,மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். கடலூர் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். பூத் கமிட்டி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஐ.டி.பிரிவு மண்டல துணைத்தலைவர் மாலதி,கள்ளக்குறிச்சி மாவட்ட இணை செயலாளர் வினோத்,முகையூர் ஒன்றிய செயலாளர் ஜெயசூர்யா விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சுப்பரமணியன்,மாவட்ட பிரதிநிதி மாயவேல்,மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தகவல் தொழில் நுட்ப மாவட்ட தலைவர் சக்திமணி,மாவட்ட இணை செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
18-Oct-2025