மேலும் செய்திகள்
வேளாண் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டம்
23-Mar-2025
பண்ருட்டி: முந்திரிவாரியம் அமைப்பது குறித்து தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட்டின்போது, முந்திரி வாரியம் அமைக்கப்படும் என வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி நேற்று சென்னையில் முந்திரி வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி மற்றும் முந்திரி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
23-Mar-2025