உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4:00 மணியளவில் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. அதில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் கொண்டு வருவது குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கடலுார் மாவட்ட செயலர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலர்கள், நிர்வாகிகள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை