மேலும் செய்திகள்
மாநகராட்சி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
20-Nov-2024
கடலுார்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள், கடலுார் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்க கடலுார் மண்டல தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், துணைத்தலைவர் கருப்பையன், மாவட்டசெயலாளர் பழனிவேல், மண்டல செயலாளர் சுதர்சன்பாபு சிறப்புரையாற்றினர். பருவகால பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும், பொதுவினியோகத்தில் உள்ள குறைகளை அகற்ற வேண்டும், இன்டேன் எரிவாயு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.மண்டல பொருளாளர் கலைவாணன் நன்றி கூறினார்.
20-Nov-2024