உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒப்பந்த தொழிலாளர் போனஸ் கோரிக்கை என்.எல்.சி., நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் விஷணுபிரசாத் எம்.பி., வலியுறுத்தல்

ஒப்பந்த தொழிலாளர் போனஸ் கோரிக்கை என்.எல்.சி., நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் விஷணுபிரசாத் எம்.பி., வலியுறுத்தல்

கடலுார்: 'என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான போனஸ் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' என விஷ்ணுபிரசாத் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு சட்டப்படியான போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும் என கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பாலும் தான் நிறுவனம் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகிறது.அந்த லாபத்தில் அவர்கள் கேட்கும் தொகை மிகக்குறைவு. நிர்வாகம் 8.33 சதவீத போனஸ் வழங்க முன்வருவது என்பது இன்றைய விலைவாசிக்கு ஏற்புடையது அல்ல. மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., ரயில்வே, அஞ்சல்துறை பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 76 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்குகிறது.ஆனால் என்.எல்.சி., நிறுவனத்தில் 3 விதமான போனஸ் வழங்கப்படுவது ஏன் என்பது புரியவில்லை. லாபத்தில்தான் போனஸ் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில் போனஸ் சட்டத்தில் 8.33 முதல் 29 சதவீதம் வரை வழங்க வழி இருக்கும்போது, 8.33 சதவீதம் என்ற வகையில் வழங்குவோம் என்பது ஏற்புடையது அல்ல.பண்டிகை நெருங்கி வரும் சூழலில் ஊருக்கே ஒளி வழங்கும் என்.எல்.சி., நிர்வாகம் அந்த ஒளிக்கு பின்னால் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதை தவிர்த்து, ஒப்பந்தத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி