உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒப்பந்ததாரர் தாக்கு: வாலிபர் கைது

ஒப்பந்ததாரர் தாக்கு: வாலிபர் கைது

விருத்தாசலம்: இட பிரச்னையில் கட்டட ஒப்பந்ததாரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சாவடிக்குப்பம் முத்தையன் மகன் ராஜ்குமார், 35. கட்டட ஒப்பந்ததாரர். காந்தி நகரில் உள்ள 2 சென்ட் பூர்வீக இடம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் சுரேஷ், 40, என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், பிரச்னைக்குரிய இடத்தில் சுரேஷ் சிலருடன் சேர்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதனை ராஜ்குமார் தட்டிக்கேட்டபோது, சுரேஷ் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில், காயமடைந்த ராஜ்குமார், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை