மேலும் செய்திகள்
சிதம்பரம் கொலை வழக்கு : திருவாரூர் நபர் கைது
28-Mar-2025
சிதம்பரம் : சிதம்பரம் பகுதி மின்சார டிரான்ஸ்பார்மர்களில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த உசுப்பூர் பாலம் அருகே அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காப்பர் கம்பி மூட்டை இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சிதம்பரம் கூத்தன்கோவில் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் கமலநாதன்,25; அண்ணாமலை நகர் செல்வராஜ், 48; என்பதும், சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள 9 இடங்களில் மின்மாற்றியிலிருந்து காப்பர் கம்பி திருடி வெளியூருக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.அதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ காப்பர் கம்பிகள், 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 சொகுசு கார்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.டி.எஸ்.பி., லாமேக் கூறுகையில்,' காப்பர் கம்பி திருட்டு தொடர்பாக 9 வழக்கு உள்ளன. இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்னர். இவ்வழக்கில் மேலும் 5 பேரை தேடி வருகிறோம் என்றனர்.
28-Mar-2025