உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் மோதி மாடு பலி

கார் மோதி மாடு பலி

விருத்தாசலம்: விருத்தாசலம், ஏனாதிமேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் தியாகராஜன், 56; இவர், 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கார்குடல் ஏரியில் மாடுகளை மேய்த்துவிட்டு, விருத்தாசலம் புறவழிச்சாலை வழியாக வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது, அவ்வழியே சென்ற இன்டிகா கார் மோதியில், ஒரு பசு மாடு இறந்தது. இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !