மேலும் செய்திகள்
காரைக்குடி மாநகராட்சியிடம் ஊராட்சிகள் ஒப்படைப்பு
28-Jan-2025
கடலுார்: சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என கடலுார் மாநகர கமிஷனர் அனு கூறினார். இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிவதால் விபத்து மட்டுமின்றி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.கடந்த அக்., முதல் முதல் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கட்டி வைத்தனர். மாட்டின் உரிமையாளர்கள் கேட்கும் போது, அபராதம் விதித்து அர்களிடம் மாடுகளை ஒப்படைத்து எச்சரிக்கை செய்து வந்தோம். தற்போது, மீண்டும் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதாக அதிகளவில் புகார் எழுந்துள்ளது. மாடு வளர்ப்போர் தங்கள் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். மாடுகள் மீண்டும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றி திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். அதன் பின், மாடுகள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியாது. பலமுறை மாடுகளை பிடித்த போதும் அவர்கள் நலன் கருதி எச்சரிக்கை செய்து மாடுகளை ஒப்படைத்தோம். இனி வரும் காலங்களில் சாலையில் மாடுகள் சுற்றி திரியக்கூடாது.இதனை மீறினால் கடும் எச்சரிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
28-Jan-2025