மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வேன் பறிமுதல்
12-Jan-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 20. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிகிறார். இவர், நேற்று வழக்கம் போல், எருமனுார் கிராமத்திற்கு கலெக்ஷனுக்கு சென்றார். மணிமுக்தாற்று பாலம் அருகே பைக்கில் சென்றபோது, மணலுார் பகுதியை சேர்ந்த நவீன், 21, என்பவர், சிவக்குமாரை வழிமறித்து, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டார்.பின்னர், சிவக்குமார் கூச்சலிட்டதும் நவீன் அங்கிருந்து தப்பியோடினார்.இதுகுறித்து, சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, நவீனை கைது செய்தனர்.கடந்தாண்டு விருத்தாசலம் மணலுாரில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டி கேட்டதால், ஒருவரை கொலை செய்தது, பெண்ணாடம் பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நவீன் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
12-Jan-2025