மேலும் செய்திகள்
தடகள மைதான திறப்பு விழா எப்போது?
16-Mar-2025
கடலுார்: கடலூர் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்க கூட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ்பாபு வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சங்க மாநில துணைத் தலைவர் பாலசுந்தரம், பேராசிரியர் நடராஜன், துணைத் தலைவர் திருமலை, தர்மலிங்கம், கலியபெருமாள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வரும் ஏப்ரல் 21, 22 மற்றும் 23 தேதிகளில் மைசூர் சாமுண்டி விகார் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள அகில இந்திய அளவிலான தடகள விளையாட்டு போட்டியில் கடலுார் மாவட்டத்தில் இருந்து 8 பெண்கள் உட்பட 33 தடகள வீரர்கள் பங்கேற்கிறார்கள். வீரர்களை கவுரவிக்கும் வகையில் யுனிவர் செல் அமைப்பு சார்பில் துணைத் தலைவர் முருகன், அனைவருக்கும் டி-சர்ட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சங்க பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார்.
16-Mar-2025