உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாநகர பா.ஜ., தலைவர் தேர்வு 

கடலுார் மாநகர பா.ஜ., தலைவர் தேர்வு 

கடலுார்: கடலுார் கிழக்கு மாநகர பா.ஜ., தலைவராக பிரவீன் குமார் தேர்வு செய்யப்பட்டார்.கடலுாரில் கிழக்கு மாநகர பா.ஜ., தலைவர் தேர்தல் நடந்தது. இதில், மாநகரத் தலைவராக பிரவீன்குமார் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மாநில தேர்தல் பார்வையாளர் விநாயகம், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கோவிந்த ராஜ், தேர்தல் அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினர்.மாநகர பொதுச் செயலாளர் செந்தில், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் செந்தாமரைக்கண்ணன், பாலமுருகன், விக்னேஷ், குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, பத்மினி ஜெயந்தி, கிருஷ்ணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை