கடலுார் காங்., பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை
கடலுார்,:கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் சிவா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார், 39; காங்., கட்சி மாநகர பொருளாளர். இவரது மனைவி ரேகா, 35. ராஜேந்திரகுமார், சரவணா நகர் பைபாஸ் சாலையில் ஹார்டுவேர்ஸ் நடத்தி வந்தார்.நேற்று மதியம் வெளியே சென்றிருந்த கடை ஊழியர்கள் திரும்பிய போது, ராஜேந்திரகுமார் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்தனர்.இதில், ராஜேந்திரகுமார் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது கடையில் இருந்து ஒரு நபர் வேகமாக காரில் ஏறிச் சென்றதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர். மூன்று தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.