உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் : கடலூர் முதுநகரில் துவக்கம்

இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் : கடலூர் முதுநகரில் துவக்கம்

முதுநகர் : கடலூர் முதுநகரில் இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் துவக்கவிழா நடந்தது. ஜமா அத் தலைவர் அமீர்கான் தலைமை தாங்கினார். மன்சூர் மரைக்காயர், முகமது கஜ்ஜாலி முன்னிலை வகித்தனர். முகமது மொய்தீன் பைஜி குரான் வாசித்து விழாவை துவங்கி வைத்தார். ஜமா அத் செயலர் முகமது முஸ்தபா, ஒருங்கிணைப்பாளர் முகமது கமாலுதீன் பேசினர். டி.எஸ்.பி., வனிதா இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் அமைப்பை துவக்கி வைத்து பேசினார். ஜமா அத் மாவட்ட தலைவர் முகமது யூனுஸ், அப்துல் காதர் மதனி, செய்யது மொகைதீன், முகமது நைனா மரைக்காயர் வாழ்த்திப்பேசினர். முகமது யூனிஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை