உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே கேட் பழுது போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே கேட் பழுது போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம்:வயலூர் ரயில்வே கேட் திடீரென பழுதானதால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம் அடுத்த வயலூர் ரயில்வே கேட் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூடப்பட்டது. ரயில் சென்ற உடன் கேட் கீப்பர் கேட்டை திறக்க முயன்றார். ஆனால் கேட் தூக்குவதற்காக பயன்படும் புஷ் வேலை செய்யவில்லை.கேட் கீப்பர் எவ்வளவு முயன்றும் திறக்க முடியாததால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் நேரில் சென்று 5.30 மணிக்கு கேட்டை சரி செய்தனர். அதற்குள் கேட்டின் இரு புறங்களிலும் பஸ், லாரி, பள்ளி வாகனங்கள் என நீண்ட தூரத்திற்கு நின்றன.இதனால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் நேற்று மாலை 4.15 மணி முதல் 5.30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை