உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வில்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

வில்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர்:வண்டிப்பாளையம் வில்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கடலூர், பழைய வண்டிப்பாளையத்தில் உள்ள வில்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷபந்தனம், யாகசாலை பிரவேசத்தை தொடர்ந்து முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது. தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கடம் புறப்பாடாகி 11 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 11.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு விநாயகர் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி