உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்நாடு கால்பந்து அணி கோல் கீப்பராக கடலுார் வீரர் மூன்றாவது முறையாக தேர்வு

தமிழ்நாடு கால்பந்து அணி கோல் கீப்பராக கடலுார் வீரர் மூன்றாவது முறையாக தேர்வு

கடலுார்; தமிழ்நாடு கால்பந்து விளையாட்டு ஆணிக்கு மூன்றாவது முறையாக கடலுார் கால்பந்தாட்ட இளம் வீரர் கோல் கீப்பராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடலுார் புதுநகர் போலீஸ் நிலையம் குடியிருப்பைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகானந்தம் .இவர் வடலுார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ., யாக பணியாற்றி வருகின்றார். இவரது மகன் அருண் ,18; இவர் கடலுார் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் படிக்கும் போதே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். தற்போது சென்னை ஜெயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.பி.ஏ., படிக்கிறார். அருண் கடலுார் நைசா அகாடமியில் சேர்ந்து கோச் செந்தில்குமார் மூலம் கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்றார். அருண் கால்பந்து விளையாட்டில் முன் கள வீரராகவும், கோல் கீப்பபராகவும் பங்கேற்று வருகிறார். கடந்த 2023ல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கடலுார் வீரர் அருண், 20 வயதிற்குட்பட்டோர் தமிழ்நாடு கால்பந்து விளையாட்டு அணிக்கு கோல் கீப்பராக இருந்துள்ளார். 20 வயதிற்குட்பட்டோர் கால்பந்து விளையாட்டில் 2024ம் ஆண்டு சட்டீஸ்கரில் நடந்த சுவாமி விவேகானந்தார் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் அருண், தமிழ்நாடு கால்பந்தாட்ட அணியில் கோல்கீப்பராக தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். அதேப்போன்று 2025ம் ஆண்டுக்கான தேர்வு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் தமிழ்நாடு கால்பந்து கழகம் சார்பில் தமிழ்நாடு கால்பந்து விளையாட்டு அணிக்கான தேர்வு நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் இருந்து 20 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர்கள் 250 பேர் பங்கேற்றனர். இதில் அருண் தமிழ்நாடு கால்பந்து அணியில் கோல் கீப்பர் வீரராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு அணிக்கு 2 கோல்கீப்பர் உள்ளிட்ட 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கால்பந்து வீரர் அருண், தமிழ்நாடு கால்பந்து அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வாகி கடலுாருக்கு பெருமை சேர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி