உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு 

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் கடலுார் போக்சோ கோர்ட் தீர்ப்பு 

கடலுார்: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கடலுார் அடுத்த கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,40; கூலித் தொழிலாளி. திருமணமான இவர், கடந்த 2018ம் ஆண்டு 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதன்பின்னர் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மணிகண்டனை கைது செய்த கடலுார் அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒருலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை