உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிய இளையோர் போட்டி: கடலுார் மாணவி பங்கேற்பு

ஆசிய இளையோர் போட்டி: கடலுார் மாணவி பங்கேற்பு

கடலுார்: பஹ்ரைனில் நடக்கும் மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டுப்போட்டியில், கடலுாரைச் சேர்ந்த மாணவி ரக் ஷனா இந்தியா சார்பில்பங்கேற்றார். கடலுார் செயின்ட் மேரிஸ் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ரக் ஷனா. இவர் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறன்பள்ளி மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தற்போது பஹ்ரைனில் நடக்கும் மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டுப்போட்டியில் டெக்பால் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றார்.நேற்றுமுன்தினம் பஹ்ரைனில் நடந்த மகளிர் இரட்டையிர் பிரிவில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடினார். கடலுாரைச் சேர்ந்த பள்ளிமாணவி, ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாடியதை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை