| ADDED : அக் 30, 2025 06:48 AM
கடலுார்: மாநில அளவிலான பென்காக் சிலாட் லீக் போட்டியில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். திருச்சி அடுத்த தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பெண்களுக்கான அஸ்மிதா கேலோ இந்தியா பென்காக் சிலாட் லீக் போட்டி நடந்தது. அதில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கடலுார் உட்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டத்திலிருந்து 20 பேர் பங்கேற்றனர். டேண்டிங், துங்கள், ரெகு, சோலோ, காண்டா உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில் கடலுார் மாவட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற வீராங்கனைகள், தென்னிந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளை பென்காக் சிலாட் அசோசியேஷன் கடலுார் மாவட்ட செயலாளர் இளையராஜா மற்றும் பயிற்சி யாளர்கள் பாராட்டினர்.