உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் அணிக்கு வெண்கலம்

மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் அணிக்கு வெண்கலம்

கடலுார்: சேலத்தில் நடந்த மாநில அளவிலான சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் கடலுார் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றது.சேலம் மாவட்டம், ஓமலுாரில் மாநில அளவிலான 16வது சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் சேலம், வேலுார், கரூர், கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.ஆடவர் பிரிவில் கரூர் அணி முதலிடத்தையும், சேலம் இரண்டாமிடத்தையும், கடலுார், வேலுார் அணிகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன. மகளிர் பிரிவில் வேலுார் முதலிடத்தையும், கரூர் இரண்டாமிடத்தையும், கடலுார், சேலம் அணிகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.ஆடவர், மகளிர் பிரிவுகளில் மூன்றாம் இடம் பிடித்த கடலுார் அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. வெண்கல பதக்கம் வென்ற கடலுார் அணியினரை சாப்ட் டென்னிஸ் அசோசியேஷன் மாநிலசெயலாளர் கவிதா செம்பண்ணன், கடலுார் மாவட்ட செயலாளர் சித்ரா அப்பாதுரை, மாவட்ட தலைவர் கிருஷ்ணசாரதி, பொருளாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பயிற்சியாளர் அப்பாதுரை ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !