உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லுக்குப்பிந்தைய பயிர் சாகுபடி பயிற்சி

நெல்லுக்குப்பிந்தைய பயிர் சாகுபடி பயிற்சி

திட்டக்குடி: மங்களூர் வட்டார வேளாண்துறை சார்பில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் கீர்த்தனா தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் நுார்ஜஹான், விதை சான்று அலுவலர் மகேஷ் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.நெல்லுக்குப்பின் பயர் வகைகள் சாகுபடி செய்வது குறித்தும், அதன் நோக்கம், பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பயர் வகைகள், சிறுதானியங்களில் உள்ள புதிய ரகங்கள், விதைப்பண்ணை அமைத்தல், நெல் பயிரில் மேற்கொள்ள வேண்டிய நோய் கட்டுப்பாட்டு அறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.பயிற்சி முகாமில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ஆனந்த், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்லமுத்து, முத்துசாமி, ரோவர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் மங்களூர் வட்டார முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ