மேலும் செய்திகள்
வயல்களில் நெற் பயிர்கள் நடவு
20-Sep-2024
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் பெய்த மழையால் சம்பா நெல் நடவு சாகுபடி நிலங்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு மற்றும் இயந்திரம் நடவு, ஒரு போக சம்பா சாகுபடியாக விவசாயிகள் செய்துள்ளனர். தற்போது நடவுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் இயந்திரம் மூலம் நடவு செய்தவர்கள் நிலங்களில் கடந்த இரு நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் நடவு பயிர்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்த மழையால் நேரடி நெல் விதைப்பு நிலங்களுக்கு ஏற்ற மழையாக இருந்தாலும், நடவு பயிர்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இளம் நெற்பயிர்களில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
20-Sep-2024