உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

பரங்கிப்பேட்டை: நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கடைமடை பகுதியில், 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்தனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து செழிப்பாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்தன. நோய் தாக்குதலால் அழுகி சேதமடைந்ததா அல்லது வேறு காரணங்களால் நெற்பயிர் சேதமடைந்ததா என வேளாண் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை