உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேதமடைந்த நெற்பயிர்கள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

சேதமடைந்த நெற்பயிர்கள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை: தினமலர் செய்தி எதிரொலியாக, சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கடைமடை பகுதியில், சின்னகுமட்டி, பெரியகுமட்டி உள்ளிட்ட, 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 150 ஏக்கர் விவசாய நிலங்களில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு பயிர் செய்திருந்தனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து செழிப்பாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று சேதமடைந்த நெற்பயிர்களை, விருத்தாசலம் அறிவியல் வேளாண்மை நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், பேராசிரியர் காயத்திரி, பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் நந்தினி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெற்பயிர்கள் நோய் தாக்குதலால் அழுகி சேதமடைந்ததா அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்ததா என மண் பரிசோதனை செய்ய 5 இடங்களில் மண் சேகரித்து எடுத்துச்சென்றனர். சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி