ஆபத்தான மரம் அகற்றம்
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே கீழே விழும் அபாய நிலையில் இருந்த மரம் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தேத்தாம்பட்டு கிராமத்தில் உள்ள பாலத்தின் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் இருந்தது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது மரம் முறிந்து சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரம் இருந்த பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.