மேலும் செய்திகள்
பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
07-Sep-2025
நெல்லிக்குப்பம்: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு பால் கேனில் சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பஸ் ஸ்டாப் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த பால் வியாபாரியை நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்தி பிடித்து சோதனை செய்தனர். பைக்கில் கட்டியிருந்த பால் கேனில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரிந்தது. விசாரணையில், நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி சரவணன்,43; என்பதும், வியாபாரம் முடித்து புதுச்சேரி மாநிலம், சோரியாங்குப்பத்தில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்து, 60 சாராய பாக்கெட்டுகள், பால் கேன், பைக்கை பறிமுதல் செய்தனர்.
07-Sep-2025