கொலை மிரட்டல் : வாலிபர் கைது
கடலுார்: முன்விரோத தகராறில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி மகன்,விஜய், 23; இவரது குடும்பத்திற்கும், 51 வயது நபருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், 51 வயது நபரின் மகள்களின் புகைப்படங்களை விஜய் ஏ.ஐ.,தொழில்நுட்பம் மூலமாக சித்தரித்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டார். இதனையறிந்து தட்டிக்கேட்ட அந்த நபரை, விஜய் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விஜயை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனர்.