மேலும் செய்திகள்
சாலையில் கொட்டிய ஜல்லி பொதுமக்கள் கடும் அவதி
16-Jun-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் கட்டப்படும் பாலத்தில் இணைப்பு சாலை அமைக்கும் பணி துவங்காமல் உள்ளது. நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கடந்த 1967ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் வலுவிழந்து காணப்பட்டது. இதனால் கடந்த 2023ம் ஆண்டு அக்., மாதம் நபார்டு திட்டத்தின் கீழ் 19 கோடியே 62 லட்சம் ரூபாய் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து, தற்போது வெள்ளை அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பாலத்தை வரும் நவ., மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி பண்ருட்டி தாலுகாவிலும், மற்றொரு பகுதி கடலுார் தாலுகாவில் உள்ளது. பாலத்தில் இணைப்பு சாலைகள் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன் அளவீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இணைப்பு சாலைகள் அமையும் இடத்தில் உள்ள நிலம் மற்றும் மரம் வியாபாரிகளுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இடத்தை கையகப்படுத்தாததால் இணைப்பு சாலைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணிகள் இதுவரை துவங்காமல் மந்தமாக உள்ளது. இப்பணியை முடித்தால் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு இணைப்பு சாலை பணியை துவக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Jun-2025