உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற கோரிக்கை

பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசு இடம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைத்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டது.இது குறித்து கடந்த ஜனவரி மாதம் வருவாய்த்துறை சார்பில், அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., விஜிகுமார், இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.அப்போது ஆக்கிரமித்த நபர் கால அவகாசம் கேட்டார். இதனால் நேற்று மதியம் வரை அவகாசம் அளித்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு நபர் ஆக்கிரமிப்புகளை, வெறும் பெயர் அளவிற்கே அகற்றிக் கொண்டார். ஆனால், அரசு உத்தரவின் படி பள்ளி வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி