உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.முதல்வரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ரகு முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் லெனின் பேசினார். நிர்வாகிகள் பாண்டியன், சின்னசாமி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நாகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை