உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விருதையில் ஆர்ப்பாட்டம்

 விருதையில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் புதுப்பேட்டை திரவுபதி கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் புதுப்பே ட்டை திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு, போலியான முறையில் பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளை கண்டித்தும், கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழிபாட்டாளர்கள், பக்தர்கள், அனைத்து இந்து சமூக மக்கள், இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ஐகோர்ட் உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம், பாலக்கரை அம்மா உணவகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கதிரவன், கருணாமூர்த்தி, குமார், வழக்கறிஞர் மணிகண்ட ராஜன், முன்னிலை வகித்தனர். பாவாடைராயன் வரவேற்றார். இந்து முன்னணி மாநில செயலாளர் சனில்குமார் கண்டன உரையாற்றினார். மாநில செங்குந்தர் சங்க முன்னாள் தலைவர் ராஜவேல், மாவட்டத் தலைவர் ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் கருணாமூர்த்தி, சத்யா செல்வம், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அதில் ஐகோர்ட் உத்தரவை மீறிய தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை