ஆர்ப்பாட்டம்
கடலுார்; கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமரேசன், பொருளாளர் பாலமுருகன், ஒருங்கிணைப் பாளர் ராஜ்குமார், இளைஞரணி செயலாளர் அறிவழகன் பங்கேற்றனர். திருப்பூரில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.