நல்லுார், மங்களூர் ஒன்றியத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தேவை
வேப்பூர்: நல்லுார், மங்களூர் ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.பருவநிலை மாற்றம், மர்ம காய்ச்சல் பாதிப்பால் வேப்பூர் அரசு மருத்துவமனை, நல்லுார் மற்றும் மங்களூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பலர் சிகிக்சைக்கு வந்து செல்கின்றனர்.டெங்கு, மர்ம காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க ஊராட்சிகள் தோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.ஆனால், நல்லுார், மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை இல்லை. எனவே, நல்லுார், மங்களூர் ஒன்றியங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சுகாதார துறையினர் மேற்கொள்ள வேண்டும்.