உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு

மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு

கடலுார்: கடலுார் மாநகராட்சி, 34வது வார்டில் மழைநீர் தேங்கிய பகுதியை மாநகராட்சி துணைமேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலுார் மாநகராட்சியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதில் 34வது வார்டு, பாலன் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த கடலுார் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், பாலன் காலனிக்கு நேரில் சென்று மழைநீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வி.சி.,கடலுார் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகிகள் அஜித் சிலம்பு, புதியவன், காட்டுராஜா, கலையரசன், மீனா, தமிழரசி, மதுமிதா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை