உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரூ.54 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

 ரூ.54 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

நெய்வேலி டிச. 11-: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ரூ. 54 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணி துவங்கியது. நெய்வேலி அடுத்துள்ள கோ.சத்திரம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் மாவட்ட கனிமவள நிதியின் கீழ், ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில், இரு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டட கட்டுமான பணிகளை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தொடர்ந்து, சிவ நந்திபுரத்தில் கடலுார் எம்.பி., நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அவர், வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் துரைசாமி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தொழிலதிபர் சாரங்கபாணி, நடராஜ், பொருளாளர் ஐயப்பன், கோவிந்தராஜ், ராஜதுரை, ராதாகிருஷ்ணன் தனசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை