உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேவி மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம்

தேவி மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் 45ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது. மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் 45ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ஓம்சக்தி கோவிலில் இருந்து பக்தர்கள், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், 108 பால்குடம் சுமர்ந்தும் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் செடல் அணிந்தனர். ஏராளமான பெண்கள் மாவிளக்கு போட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள் ராஜமாரியப்பன், வேலுசாமி, ராமச்சந்திரன், சுந்தரமகாலிங்கம், அம்பிகேஸ்வரன், விக்னேஷ் உள்ளிட்டோர் செ ய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை